இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட கடலோர மாவட்டங்கள் ,திருச்சி ,அரியலூர் ,பெரம்பலூர் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது.
அதேபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை கன்னியாகுமரி ,தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வறண்ட வானிலையே தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.