Election Dates 2026 LIVE Updates: இந்திய அரசியலில் முக்கியமான தருணம் இன்று உருவாக உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் காத்திருக்கும் மக்களுக்கு தேர்தல் அட்டவணை இன்று மாலை 4 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளது. தேர்தல் தேதி வெளியானவுடன், அதனைச் சார்ந்த அனைத்து அப்டேட்களையும் இங்கே தொடர்ந்து காணலாம். இந்த அறிவிப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:50 PM (IST) Mar 15
Tamil Nadu Assembly Election 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
04:56 PM (IST) Mar 15
Tamil Nadu election 2026: வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டுகள் மிகவும் தெளிவாகவும், தேவையான விவரங்களுடனும் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
04:54 PM (IST) Mar 15
தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும். ஏப்ரல் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
04:52 PM (IST) Mar 15
வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
04:48 PM (IST) Mar 15
மேற்குவங்கத்தில் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
04:45 PM (IST) Mar 15
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
04:43 PM (IST) Mar 15
தமிழகத்தில் தற்போதைய 16வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10ம் தேதியும், புதுச்சேரி சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 7ம் தேதியும், அசாம் மாநில சட்டப்பேரவைக்கு மே 20ம் தேதியும், கேரள சட்டப்பேரவைக்கு மே 23ம் தேதியும் நிறைவு பெறுகிறது
04:41 PM (IST) Mar 15
கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
04:40 PM (IST) Mar 15
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. மனுத்தாக்கல் தொடக்கம் மார்ச் 16, மனுத்தாக்கல் முடிவு மார்ச் 23, வேட்புமனு பரிசீலனை மார்ச் 24, வேட்பு மனு திரும்ப பெற மார்ச் 26ம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
04:30 PM (IST) Mar 15
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
04:26 PM (IST) Mar 15
அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு விபரங்கள் பகிரப்படும். வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை; செல்போன்கள் வைக்க தனி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
04:22 PM (IST) Mar 15
04:21 PM (IST) Mar 15
04:19 PM (IST) Mar 15
04:15 PM (IST) Mar 15
தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
04:11 PM (IST) Mar 15
Tamil Nadu Election 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
04:09 PM (IST) Mar 15
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. ஐந்து மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
03:28 PM (IST) Mar 15
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் தேர்தல் எப்போது நடைபெறும்? வாக்கு எண்ணிக்கை நாள் எது? தேர்தல் அட்டவணையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும்? இந்த அனைத்து தகவல்களையும் தொடர்ந்து அறிய இந்த LIVE Blog-இல் இணைந்திருங்கள்.
03:27 PM (IST) Mar 15
அரசியல் கட்சிகளும் தேர்தல் தயாரிப்பில் முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தங்களின் கூட்டணிகளை உறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதே சமயம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முதல் முறையாக களம் காண உள்ளது. அந்த கட்சி தனித்தே போட்டியிடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் வழக்கம்போல் தனித்தே போட்டியிடத் தயாராகியுள்ளது. அந்தக் கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலையும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மாநில அரசியல் சூழல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
03:26 PM (IST) Mar 15
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வழக்கம்போல ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் காவல் படையினர் மற்றும் தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
03:24 PM (IST) Mar 15
ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெவ்வேறு கட்டங்களாக நடைபெறலாம். அதே நேரத்தில், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்படும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.