Minister Anbil Mahesh : தேர்வுக்கு தயாராக இருங்கள்… கண்டிப்பாக நடக்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Published : Dec 10, 2021, 10:25 AM ISTUpdated : Dec 10, 2021, 10:34 AM IST
Minister Anbil Mahesh : தேர்வுக்கு தயாராக இருங்கள்… கண்டிப்பாக நடக்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சுருக்கம்

கோவிட் சூழலை பொறுத்தே 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்படும் என்று கூறி இருக்கிறார்  அமைச்சர் அன்பில் மகேஷ்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம். கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2019 - 20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் போடப்பட்டது. கடந்த 2020 - 21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும். பொதுத்தேர்வு அறிவிப்பு ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும்.

பாடத்திட்டம் மற்றும் அப்போதைய சூழல் குறித்து முடிவு செய்து பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். கட்டாயம் தேர்வு நடைபெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும், மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும். கோவிட் சூழலை பொறுத்தே 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்படும்  ’ என்று அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!