
சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு சதுப்பு நில பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. விதிகளை மீறி சதுப்பு நில பகுதியில் கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கியதாக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி, அன்புமணி கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல், கால நிலை மற்றும் வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்திற்குள் ஒரு அடுக்கு மாடி கட்டடத் திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து கீழ்க்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
1971 ஆம் ஆண்டு ஈரநிலங்கள் தொடர்பான மாநாட்டின் கீழ் நிறுவப்பட்ட ராம்சார் தல. சட்ட செயல்முறையின்படி, 2017 ஆம் ஆண்டு ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் (i) சதுப்பு நிலம் /காப்பு காடு, (II) ராம்சார் தலம் மற்றும் (II) ஈரநிலம் ஆகியவை மூன்று தனித்தனி மற்றும் வேறுபட்ட வகைப்பாடுகள் "சதுப்பு நிலம்" என்று அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு வனச்சட்டம். 1882இன் கீழ் பள்ளிக்கரணை பகுதியில், சுமார் 698 ஹெக்டேர் பரப்பளவு, பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காப்புக் காடாக 2007 ஆம் அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள 1248 ஹெக். பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டில் உள்ள 698 ஹெக் நிலமும். உரிய நடைமுறைகளுக்குப் பின்பு வரையறுக்கப்படவுள்ள 550 ஹெக் கூடுதல் நிலமும் அடங்கும்.
தனியார் பட்டா நிலங்கள்
ஈர நில விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள சர்வே கண்டறிந்து நிலப்பகுதிகளை எண்களுடன் வரையறுப்பதற்கான நில உண்மை கண்டறிதல் Ground Truthing) இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஊடகங்களில் குறிப்பிடப்படும் கட்டுமானம் குறித்த நிலத்தின் புல எண்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி இத்தகைய தனியார் பட்டா நிலங்கள் ஆகும். இப்பணிகளை, ஒன்றிய அரசாங்க நிறுவனமான, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) செய்யப்பட்டு, குறிப்பிட்ட சர்வே எண்களுடன் எல்லைகளை வரையறுக்கும் பணி நவம்பர் 2024ல் வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம்
தற்போது தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM). பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்திற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (IMP) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இம்மேலாண்மைத் திட்டமானது, சர்வே எண்களின் அடிப்படையில் எல்லைகளை வரையறுத்தல், டிஜிட்டல் வரைபடத்தில் நிலப் பயன்பாடு. ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017 இன் விதி 7 மற்றும் ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள். 2017. அத்தியாயம் XIII. பத்தி 62 இன் கீழ் அனுமதிக்கப்பட வேண்டிய அல்லது ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய செயல்பாடுகளின் பட்டியலை தயாரித்தல் (அனைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் பங்கேற்புடன்) உள்ளடக்கியது.
ஈரநிலங்கள் விதிகள்
ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள். 2017. அத்தியாயம் XEL 66 செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களின்படி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. "All Ramsar Sites, deemed covered under these Rules, shall also be notified as per the process laid out in paragraphs 57-64. This is proposed to ensure that the site boundaries are properly delineated and that knowledge about the same is available in the public domain. It is advised that the information in the Brief Document may be consistent with the Ramsar Site information Sheet (RSIS) submitted to the Ramsar Convention during site designation or updated thereafter."
240 நாள் காலக்கெடு
இதன்படி, ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017-ஐ செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலில் மேலே உள்ள பத்தி 66 இன் படி ராம்சார் தலத்தை அறிவிக்கும் செயல்முறை, ராம்சார் தலத்திற்குள் உள்ள சர்வே எண்கள் உட்பட வரைபடம் மற்றும் திட்டத்தை பொது களத்தில் வைப்பதாகும் என்பது தெளிவாகிறது. மேலும். பத்தி 63 இன் படி ராம்சார் தலமாக அறிவிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக. இதனை 60 நாட்களுக்குள் ஒரு பொது ஆலோசனைக்கு உட்படுத்துவது என்ற செயல்முறையும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பத்தி 64 குறிப்பிட்டுள்ளவாறு ஆட்சேபனைகள் தெரிவிக்கும் நபர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அல்லது பரிந்துரைகளை பரிசீலித்து அதனை நிவர்த்தி செய்ய மாநில அரசுக்கு 240 நாள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை
எனவே ஈரநில விதிகளின்படி பள்ளிக்கரணை ஈரநில அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்கள் பட்டா நிலங்கள் என்பதால் செய்தித்தாள் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சார் தல எல்லை வரையறையானது குறிப்பிட்ட சர்வே எண்களுடன் ஒப்பிட்டு பரப்பளவை வரையறுப்பது, நில உண்மைகண்டறிதல் சோதனை மற்றும் அறிவிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே அனுமதி
ராம்சர் தலம் அமையும் நிலங்கள் இன்னும் புல எண்களுடன் குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.