
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 485 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதில் ஆண்கள் 291 பேருக்கும் பெண்கள் 194 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 72 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35, 69,142 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 519 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,26,014 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க:8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. 7,231 பேருக்கு பாதிப்பு.. 45 பேர் பலி
தமிழகம் முழுவதும் மொத்தம் 5,093 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா இறப்பு பதிவாகவில்லை. நேற்று 491 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.