CM Vijay : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

Published : Sep 28, 2026, 01:46 PM IST
Tamil Nadu CM Vijay Launches Thai Maman Thanga Mothiram Scheme

சுருக்கம்

Thai Maman Thanga Mothiram Scheme : அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தகுதியான பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையுள்ள 22 கேரட் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்து, தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த மோதிரம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இது குறித்து அமைச்சர் அருண் ராஜ் பேசுகையில், "ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் ஓடி வருவது தாய்மாமன் தான். தன் சகோதரியின் சந்தோஷத்தை தன் சந்தோஷமாக நினைப்பவர் அவர். அன்பும், ஆதரவும், பாதுகாப்பும் கொடுத்து எப்போதும் துணையாக இருப்பேன் என அவர் உறுதியளிப்பார். அந்த தாய்மாமன் உறவை போற்றும் வகையில், நமது அண்ணன் திரு. விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குகிறது. இந்த திட்டத்தை எங்கு தொடங்குவது என்ற கேள்வி வந்தபோது, முதலமைச்சர் தேர்ந்தெடுத்த இடம் மதுரை. அன்னை மீனாட்சியின் அருளும் கருணையும் நிறைந்த புண்ணிய பூமி இது" என்றார்.

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்

தகுதியான குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பயனளிக்கும். தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். மாவட்ட நிர்வாகத்தின் தகவல் படி, பயனாளிகள் e-KYC சரிபார்க்கப்பட்ட ஆதார் அட்டையுடன், அரசு அங்கீகரித்த அடையாள அல்லது இருப்பிட சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மையங்களில் காலையில் 25 பேருக்கும், மாலையில் 25 பேருக்கும் மோதிரம் வழங்கப்படும்.

கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே அவர்கள் மையங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பிறந்த அரசு மருத்துவமனையிலேயே டிஸ்சார்ஜ் செய்யும் போது மோதிரம் வழங்கப்படும். பயனாளிகள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகமே போக்குவரத்து வசதிகளையும் செய்துள்ளது. 'வெற்றி தமிழகம்' என்ற நீண்ட கால தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, 'தாய்மாமன் சீர்' என்ற தமிழ் கலாச்சாரத்தையும் இது பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு தங்க மோதிரத்திலும் தனித்துவமான சீரியல் எண் இருக்கும். அதை பிரிக்க முடியாத பாதுகாப்பான பேக்கிங்கில் வழங்குவார்கள். தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள், PICME-ல் பதிவு செய்து RCH அடையாள அட்டை வாங்கியிருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 22 முதல் திட்டம் தொடங்கிய நாள் வரை பிறந்த குழந்தைகளுக்கு, மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்கள் மூலம் மோதிரம் வழங்கப்படும். ஒரு மையத்திற்கு தினமும் 100 குழந்தைகள் வீதம் இன்று முதல் விநியோகம் தொடங்குகிறது. திட்டம் தொடங்கிய நாள் முதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு டிஸ்சார்ஜ் செய்யும் போதே மோதிரம் கிடைத்துவிடும். அரசு மருத்துவ சேவைகள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதும், பாதுகாப்பான பிரசவங்களை ஊக்குவிப்பதும் தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

1 ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க ராஜினாமா பண்றேன்... உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்க சவால்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?