தமிழக மீனவர்கள் படும் துயரம் கண்ணுக்கு தெரியலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்! மத்திய அரசுக்கு கடிதம்!

Published : Nov 03, 2025, 06:28 PM IST
MK Stalin vs Modi

சுருக்கம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 35 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழடலில் மீன்பிடிக்க செல்கின்றனர். ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு கான மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் இன்று (03.11.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை அட்டூழியம் தொடரும் நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

35 மீனவர்கள் சிறை பிடிப்பு

அக்கடிதத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில் மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும் அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.

வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள்

இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உடனே விடுவிக்க நடவடிக்கை வேண்டும்

தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்