முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் வரும் திங்கள்கிழமை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மக்களே கவனத்திற்கு !! தீபாவளி முந்தைய நாள் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்..
அதன்படி, வரும் 26 ஆம் தேதி சென்னை தலைமையகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 9.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.