தீபாவளிக்கு முந்தைய நாள் அரசு விரைவு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு வரும் தீபாவளி என்பதால் தமிழகத்தை பொருத்தவரை இந்தாண்டு தீபாவளி பண்டிகையொட்டி லட்சகணக்கான மக்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்திலேயே முடிவடைந்தால், அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய லட்சக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர்.
மேலும் படிக்க:இனி பள்ளிகளில் இசை, நடனம், நாடகம் வகுப்புகள் நடத்தப்படும்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட திடீர் உத்தரவு..
இந்நிலையில் தமிழக அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிக்கைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முந்தினம் தொடங்கியது. ஒரு மாதத்திற்கு முன்பு பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் நிலையில், அக். 21 ஆம் தேதி பயணம் செய்வோருக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முந்தினம் தொடங்கியுள்ளது.
அதே போல் அக்.22 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று திடங்கியது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. மேலும் தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு குறித்து விரைவில் அதிகார அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க:கவனத்திற்கு !! அரசு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள்..