இனி பள்ளிகளில் இசை, நடனம், நாடகம் வகுப்புகள் நடத்தப்படும்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட திடீர் உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Sep 23, 2022, 10:53 AM IST
Highlights

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

இது குறித்து பள்ளிக்‌கல்வித்‌துறை ஆணையரகம்‌ சார்பில்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

இதில் தமிழகத்தில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 9-ஆம்‌ வகுப்பு வரை பள்ளி கால அட்டவணைகளில்‌ கலை, பண்பாட்டு செயல்பாடுகள்‌ முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. வாரத்தில்‌ இரு பாடவேளைகள்‌ கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க:பொதுமக்களுக்கு முக்கிய தகவல்.. தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் 8 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது.!

இசை, நடனம்‌, காட்சிக்கலை, நாடகம்‌, நாட்டுப்புற கலை ஆகிய 5 கலைச்‌ செயல்பாடுகளில்‌ மாணவர்கள்‌ ஒன்றை தேர்வு செய்யலாம்‌. கலை, பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க பள்ளிகளுக்கு அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக்‌ கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும்‌ கலை பண்பாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும்‌.

கலை, பண்பாட்டு செயல்பாடுகளில்‌ சிறந்து விளக்கும்‌ மாணவர்கள்‌ வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச்‌ செல்லப்படுவர். கல்வி மட்டுமின்றி மாணவர்களிடம்‌ இருக்கும்‌ தனித்‌ திறன்களையும்‌ வெளிப்படச்‌
செய்து அதனை மேம்படுத்துவதற்காக இந்த செயல்பாடுகள்‌ பள்ளி கால அட்டவணையில்‌ இணைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:கடன் பெற கட்டுப்பாடு..! மத்திய அரசுக்கு ஒரு நியாயம், மாநில அரசுக்கு ஒரு நியாயமா..? பிடிஆர் ஆவேசம்
 

click me!