சிக்கிய 3300 கிலோ போதைப்பொருள்.. கலாச்சார தலைநகரை போதைப்பொருள் தலைநகராக்கும் திமுக - சாடும் அண்ணாமலை!

Ansgar R |  
Published : Feb 29, 2024, 07:37 PM IST
சிக்கிய 3300 கிலோ போதைப்பொருள்.. கலாச்சார தலைநகரை போதைப்பொருள் தலைநகராக்கும் திமுக - சாடும் அண்ணாமலை!

சுருக்கம்

Annamalai Slams DMK : போதைப்பொருள் விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள், திமுக கட்சியினர் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் இப்பொது பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு திமுகவை சேர்ந்த  ஜாபர் சாதிக் என்ற திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். அந்த விவகாரம் இப்பொது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இப்பொது ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்டு, திமுகவையும், முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் கடுமையாக கண்டித்துள்ளார் தமிழக மாநில பாஜக தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்...

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி; 1750 குடும்பங்கள் பயன்பெறும் என பெருமிதம்

"நமது நாட்டின் கலாச்சார தலைநகரமான சென்னை, திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது. 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய, திமுக நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜாபர் சாதிக் என்பவரும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பியோடி வருகின்றனர்".

"நேற்றைய தினம், குஜராத் கடல் பகுதியில், தமிழகப் படகு மூலம் எடுக்கப்படவிருந்த ₹1200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் கைப்பற்றியுள்ளது. தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வேன் என்று கூறினார். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது, அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் மூலம் தெரிய வருகிறது".

"இதற்கெல்லாம் உச்சகட்டமாக, கோபாலபுரம் இளவரசருக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சஹாரா கூரியர்ஸ் நிறுவனம்தான், ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் விநியோக மையப்புள்ளியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது".

"திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திரு. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை நினைவுபடுத்துகிறோம்" என்று கடுமையாக பேசியுள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி; அரசின் வலிமையான சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - முதல்வர் பெருமிதம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை