எமர்ஜென்சி காலத்திற்கு மீண்டும் தமிழகம்! கருப்பு துப்பட்டாவை பார்த்து பயப்படும் திமுக அரசு! வானதி சீனிவாசன்!

By vinoth kumar  |  First Published Jan 7, 2025, 4:22 PM IST

தமிழக ஆளுநர் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு நிராகரித்ததன் பின்னணியில் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. 


பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழகத்தின் ஆளுநர் தேசிய கீதம் பாட வேண்டும் என கேட்டார் அதற்கு திமுக அரசு இப்படி நடந்து கொள்வது முதல் முறை அல்ல. கவர்னர் அவர்கள் தன்னுடைய பொது நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மத்தியிலும் பல்வேறு சமூக விழாக்களிலும் இவர்களுடைய சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறது என்ற காரணத்தினால் எங்கெங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஆளுநரை அவமானப்படுத்த வேண்டும் என திமுக நினைக்கிறது. எப்படியாவது அவரை அச்சுறுத்தி அவருடைய செயல்பாடுகளிலிருந்து பின் வாங்கி வைக்க வேண்டும் என மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? போட்டியிடுவது திமுகவா? காங்கிரஸா?

Tap to resize

Latest Videos

கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டப்பேரவைக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் காட்டுகின்ற எதிர்ப்பை கூட நேரலை செய்ய அனுமதிப்பதில்லை. எமர்ஜென்சி காலத்திற்கு மீண்டும் தமிழக மக்களை திமுக எடுத்துக் கொண்டிருக்கிறது.  இந்த போஸ்டர் ஆர்ப்பாட்டம் எல்லாம் கவர்னருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல இவர்கள் தேசிய கீதத்தை அல்லது அரசியலமைப்புச் சட்டத்தை எதிராக நடக்கக்கூடிய போராட்டமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள்

ஆளுநரை வரவைத்து அவர் கேட்டது தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என கேட்கிறார்.  பாஜக அல்லாத அரசாங்கங்கள் உள்ளது. ஆளுநர் வருகை புரியும் போதும் முடிந்து செல்லும் போதும் தேசிய கீதம் பாடப்படுவது மரபு எனவும் அதனால் அப்போது அவர் ஆளுநர் கேட்டார்.  இதை ஏன் மறுக்க வேண்டும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டாம் என சொல்லவில்லை தேசிய கீதம் பாடுவதில் எரிச்சல் வருகிறதா என தெரியவில்லை.

தேசிய கீதத்தையும் பாட வேண்டும் ஆளுநர் சொன்னால் நாம் ஏன் கேட்க வேண்டும் என திமுக நினைத்து இதை பெரிதாக்குகிறது. அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது இந்த அரசு இந்தியாவில் அதிக கடன் வாங்கிய அரசாக உள்ளது. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி பேசுவதற்காக கவனத்தை எல்லாம் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஆளுநர் உடன் ஒரு மோதல் போக்கை கையாண்டு அதை மட்டுமே மக்களை பேச வைக்கிறார்கள். உண்மையான பிரச்சனையை திசை திருப்புவதற்காக திமுக இந்த பேரவை நிகழ்ச்சியை சாக்காக வைத்துக் கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது.

இதையும் படிங்க:  பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! போக்குவரத்துறை வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!

நேரலை விஷயத்தில் தொழில்நுட்பக் கோளாறு நாங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் சட்டமன்றத்தில் பேசும்போது நேரலை வருவதில்லை நான் கேள்வி கேட்கும் போது கொஞ்சம் மட்டுமே வெளியே வரும். நேற்றும் நேரலை வரவில்லை எப்போது எல்லாம் ஆளும் கட்சி பேசுகிறோ அப்போது எல்லாம் நேரலை வரும். திமுகவுக்கு ஆதரவாக பேசினால் போராட்டத்திற்கு அனுமதிப்போம். இல்லை என்றால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனவும் நாட்கள் செல்ல செல்ல தங்களுடைய நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை திமுக அரசு உணர்ந்து கொண்டிருக்கிறது.

அதனால் தான் மக்கள் பிரச்சினை பற்றி யாரும் பேசினாலும் பதற்றம் அடைகிறார்கள்.  அனுமதி கொடுக்க வேண்டிய போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. மாணவி கருப்பு துப்பட்டா போடுவதைப் பார்த்து பயப்படுகின்றது என்றால் அவர்களுக்கு தெரிகிறது. தமிழக மக்கள் எந்த அளவுக்கு கோபமாக இருக்கிறார்கள் என உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

click me!