Tamil Magan Hussain: இரட்டை இலை யாருக்கு? முடிவெடுக்க தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம்!

Published : Feb 04, 2023, 03:39 PM ISTUpdated : Feb 04, 2023, 03:50 PM IST
Tamil Magan Hussain: இரட்டை இலை யாருக்கு? முடிவெடுக்க தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம்!

சுருக்கம்

அதிமுக வேட்பாளரை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களில் அதிமுக சார்பில் கையெழுத்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் யார் என்பதை பொதுக்குழு மூலம் தீர்மானிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. வேட்பாளர் தேர்வு முடிவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஏ, பி படிவங்களில் அதிமுக சார்பில் கையெழுத்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் கட்சி பொதுக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக வேட்பாளராக தென்னரசுவை நிறுத்துவதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் விரிவான சுற்றறிக்கையை இன்று அனுப்பியுள்ளார். ஒப்புதல் கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தையும் தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடலில் மாற்றம் வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை

சுற்றறிக்கையை முறையாகப் பூர்த்தி செய்து, அதனை நாளை இரவு 7 மணிக்குள், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதிமுகவின் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த கே.எஸ். தென்னரசு தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதால்,  ஓபிஎஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஓபிஎஸ் தரப்பு வாபஸ் வாங்கும் பட்சத்தில் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

செந்தில் பாலாஜி எனக்கு இன்னொரு மகன்: அவர் வந்தவிட்டாலே வெற்றி உறுதி; ஈவிகேஎஸ் உருக்கம்

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்