எம்மொழிக்கும் சளைத்ததல்ல தமிழ் மொழி! கெத்தாக தனித்து இயங்கும் ஆற்றல்கொண்டது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

Published : Feb 21, 2025, 10:08 AM ISTUpdated : Feb 21, 2025, 10:32 AM IST
எம்மொழிக்கும் சளைத்ததல்ல தமிழ் மொழி! கெத்தாக தனித்து இயங்கும் ஆற்றல்கொண்டது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

சுருக்கம்

உலக தாய்மொழி தினத்தில், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் சிறப்புகளை முதல்வர் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் தொன்மையான மொழிகள் பல இருந்தாலும் தமிழ் மொழிக்கு என்று தனி சிறப்பு உண்டு. தமிழ் மொழி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது எனவும் உலகில் இடமிருந்து வலது பக்கம் எழுதப்படும் தொன்மையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. மற்றொரு சிறப்பு என்னவென்றால் பேசும்போது குறைந்த அளவே காற்ற வெளிபடம் மொழி என்ற பெருமையும் உள்ளது. குறிப்பாக எந்தவொரு சமயத்தையும் சார்ந்த இல்லாத மொழியாகவும் தமிழ் மொழி இருந்து வருகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இது மொழி, பண்பாட்டு பன்மையையும் உலகின் பல மொழிகளையும் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வை வென்றெடுக்க கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என பதிவிட்டுள்ளார். 

மேலும் தமிழககத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி இயற்றிய உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் மையநோக்க விளக்கப் பாடலையும் பதிவில் இணைத்துள்ளார். அதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்.  உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம். போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி. அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்.

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான நம் தமிழ் மொழியாம். அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி ஓதி வளரும் உயிரான உலக மொழி - கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற எந்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும். புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி. நம் மொழி நம் மொழி - அதுவே செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! என குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?