சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published : Feb 20, 2025, 08:12 PM ISTUpdated : Feb 20, 2025, 09:09 PM IST
சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

MK Stalin: உலகத் தாய்மொழி தினத்தில் முதல்வர் ஸ்டாலின் தாய்மொழி காப்போம் என்று சூளுரைத்துள்ளார். புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்புக்கு மத்தியில் முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம் என்று கூறியுள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய 2,000 கோடி ரூபாயைத் விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை எனவும் கூறினார்.

அரசியல் செய்வதற்காகவே தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது என்றும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் மத்திய அமைச்சரின் பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மத்திய அரசு தமிழ்நாட்டில் மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்கிறது எனவும் கண்டித்துள்ளனர். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்று எதிர்க்கட்சியான அதிமுகவும் கூறியுள்ளது.

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ. 4.6 லட்சம் கிடைக்கும்; டிரம்ப், மஸ்க் சிக்கன நடவடிக்கை

இந்தச் சூழலில் மத்திய பாஜக அரசின் இந்தித் திணிப்பு முயற்சியாகவே மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது என்று விமர்சிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அடாவடியைக் கண்டிக்கும் வகையில் பல வீடுகளில் பெண்கள் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' வலைத்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அஅதில், "சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்! தமிழே அறம்! தமிழே அரண்!" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெஸ்லா கம்பெனியா? எலான் மஸ்க்கை கோபித்துக் கொண்ட டிரம்ப்; காரணம் என்ன?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!