கால்பேனி தீவில் பத்திரமாய் தமிழக மீனவர்கள்…..வானிலை சீரானதும் அழைத்துவர கடலோர காவல் படை ரெடி !!!

 
Published : Dec 03, 2017, 07:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
கால்பேனி தீவில் பத்திரமாய் தமிழக மீனவர்கள்…..வானிலை சீரானதும்  அழைத்துவர கடலோர காவல் படை ரெடி !!!

சுருக்கம்

tamil fishermen safe in kalbeni island

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று ஒகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 198 பேர் லட்சத் தீவு அருகில் உள்ள  கால்பேனி தீவில் பத்திரமான உள்ளனர் என்றும்,வானிலை சீரானதும் அவர்கள் தமிழகத்து அழைத்துவரப்படுவார்கள் என்றும் இந்திய கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளனர். மேலும் தமிழகம்,  கேரளம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்று புயலில் மாட்டிக் கொண்ட  952 மீனவர்கள் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பத்திரமான இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1 ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஒகி புயலாக மாறி கன்னியாகுமரி மாவ்டடத்தை பதம் பார்த்தது. 1 ஆம் தேதிக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று ஒகி புயலலில் சிக்கிக் கொண்டனர்.

இதனால் கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கின. இந்திய கடலோர காவல் படையினர் காணாமல் போன மீனவர்களை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம் தேடி வந்தனர். மீனவர்களை தேடும் பணியில் மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்ய தயார் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒகி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்ட்ரா மாநில கடல் பகுதியில் 66 கேரள படகுகள் மற்றும் 2 தமிழக படகுகளுடன் 952 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும்  பருவநிலை சரியானதும் மீனவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என பட்னவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  கடலில் மாயமான 198 தமிழக மீனவர்கள் 18 படகுகளுடன் லட்சத்தீவு அருகே  உள்ள கால்பேனி தீவில் பத்திரமாக உள்ளனர் என்றும் அவர்கள் விரைவில் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மீதம் உள்ள காணாமல் போன மீனவர்களை தமிழகம் மற்றும் கேரளம் கடல் பகுதியில் கப்பல்களும், விமானங்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!