
தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா ?கார்ல போறவங்க இந்த வழியா போங்க......
தீபாவளி கொண்டாட ஒரே குஷியாக இருக்கும் நம்மவர்கள், எப்படா சொந்த ஊருக்கு போக போறோம்ன்னு காத்திருப்பார்கள்....
அந்த நாள் நெருங்கிவிட்டது...வரும் 18 ஆம் தேதி தீபாவளி என்பதால்,நாளை முதலே மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்குவர்.ஒரு சிலர் பேருந்தில் செல்ல முன்பதிவு செய்து இருப்பார்கள். ஒரு சிலர் ரயிலில் செல்ல முன்பதிவு செய்து இருப்பார்கள்.ஆனால் கார் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் காரில் செல்வதையே விரும்புவர்.
அவ்வாறு செல்லும்போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் வேறு வழியாக சென்றால், காரில் செல்பவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது
கார் மற்றும் இதர வாகனங்கள்
வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாகச் சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.
தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் திரும்பும் வகையில் முக்கிய பகுதிகளிலிருந்து வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் 7,043 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26, தாம்பரம் சானடோரியத்தில் 2, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் 13-ம் தேதி முதல்{நேற்று} செயல்பட்டு வருகிறது