
கன்னியாகுமரி
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியியன்ர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடலோர காவல்படையைக் கண்டித்தும்,
தாக்குதல் நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டத்திற்கு குமரி மண்டலச் செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மணிமாறன், ஜான்சிலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், ராஜேஸ், சதீஸ் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.