
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பிளஸ்–2 மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தின் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சுந்தர்ராஜன்.
இவர், அச்சரப்பாக்கம், எலப்பாக்கம் மற்றும் ஒரத்தி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று எலப்பாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, எலப்பாக்கம் பகுதியில் கல்பாக்கம் அருகே உள்ள சூரவடிமங்கலத்தைச் சேர்ந்த காண்டீபன் (37) என்பவர் பிளஸ்–2 மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வருகிறார் என்பதை கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அதனை உறுதி செய்தார்.
பின்னர், போலி மருத்துவர் காண்டீபன் குறித்து ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீ.தமிழ்வாணன் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து காண்டீபனை கைது செய்தனர். அதன்பின்னர் காண்டீபன் மதுராந்தகம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.