பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவுத் தொழிலாளி; உடனே கைது செய்த காவலாளர்கள்...

Asianet News Tamil  
Published : Jun 21, 2018, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவுத் தொழிலாளி; உடனே கைது செய்த காவலாளர்கள்...

சுருக்கம்

sweeper sexually harassed school going girl police arrested immediately ...

இராமநாதபுரம்

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவுத் தொழிலாளியை காவலாளர்கள் கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், புதுவலசை கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் திருமுருகன் (36). 

இவர், இந்தப் பள்ளியில் படித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அவர்கள்  பள்ளி நிர்வாகத்திடமும், மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலரிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் பள்ளிக்கு நேரில் சென்று  விசாரணை செய்தார். 

அந்த விசாரணையில் துப்புரவுத் தொழிலாளி திருமுருகன், பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் திருமுருகன் மீது புகார் கொடுத்தார். 

அந்த புகாரின்பேரில் திருமுருகன் மீது வழக்குப்பதிந்து காவலாளர்கள் கைது செய்தனர். அவரிடம் காவலாளார்கள் விசாரித்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 29 December 2025: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு..!
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை.. இதோ லிஸ்ட்..!