ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் எதிரே  மனைவியை சரமாரியாக வெட்டி வீழ்த்திய கணவன்… குடும்பத் தகராறில் கொடூரம்!!

 
Published : Jun 21, 2018, 10:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் எதிரே  மனைவியை சரமாரியாக வெட்டி வீழ்த்திய கணவன்… குடும்பத் தகராறில் கொடூரம்!!

சுருக்கம்

husband hit his wife by khife in rajapalayam bus stand

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பேருந்து நிலையதின் எதிரே ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஸ்கூட்டியில் வந்த இளம்பெண் ஒருவரை அவரது கணவனே சராமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு தப்பிச் சென்றார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மதீஸ்வரன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரியும் இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆனதில் இருந்தே மதீஸ்வரன் தனது மனைவி பிரியா மீது சந்தேகம் கொண்டுள்ளார். பிரியா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசுகிறார் என குற்றம்சாட்டிய அவர் இதைத் கண்டித்துள்ளார்.

ஆனாலும் பிரியா தொடர்ந்து செல்போனிலேயே பேசிக் கொண்டே இருந்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றவே, பிரியா அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மதீஸ்ரன் அடிக்கடி சென்று அழைத்துள்ளார், ஆனால் பிரியா வர மறுக்கவே அவருக்கு ஆத்திரம் தலைக்கேறியது. நேற்று பிரியா தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மதீஸ்வரன்  பிரியாவை ஸ்கூட்டியில் இருந்து கீழே தள்ளி, அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அங்கு ஆட்கள் நடமாட்டம் நிறைந்திருந்ததால், பொது மக்கள் மதீஸ்வரனை தடுத்தனர். இதையடுத்து அவர் அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரியா மதுரை அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த மதீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது.. விஜய்யை சப்பையாக்கிய சேகர்பாபு..!
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? நாள் குறித்த தமிழக அரசு!