"நாட்டில் உள்ள சிறைகளிலேயே வசதியானது பரப்பன அக்ரஹாராதான்" - எஸ்.வி.சேகர் அதிரடி பேட்டி!!

First Published Aug 4, 2017, 4:16 PM IST
Highlights
sve shekar talks about parappana agarahara


நாட்டில் உள்ள சிறைகளிலேயே மிகவும் வசதியானது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைதான் என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறையில் வெளியே ஷாப்பிங் சென்று வருவது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு வைரலாகியது.

மேலும் சிறை கைதி ஒருவர் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற புகைப்படம் வெளியானது.

மேலும் பெங்களூர் சிறையில் லஞ்சம் வாங்கி கொண்டு சிறப்பு சலுகை செய்து தருவதாக கூறி புகார்கள் எழுந்தன. இதனால் சிறைத்துறை டிஜிபி ஆக இருந்த சத்யநாயணராவ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பல விமர்சன்ங்களில் சிக்கி வரும் நடிகர் எஸ்வி சேகர், தனது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதை முடக்கி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் உள்ள சிறைகளிலேயே மிகவும் வசதியானது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைதான் எனவும், நாட்டின் பிற சிறைகளில் உள்ளவர்கள் தங்களை பெங்களூர் சிறைக்கு மாற்றுமாறு கோரி வருவதாகவும் கிண்டலடித்தார்.

click me!