தமிழர்கள் என்ன மனிதர்கள் இல்லையா?... சுஷ்மா சுவராஜ் மீது கடுப்பில் மீனவர்கள்…

 
Published : Mar 08, 2017, 08:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
தமிழர்கள் என்ன மனிதர்கள் இல்லையா?... சுஷ்மா சுவராஜ் மீது கடுப்பில் மீனவர்கள்…

சுருக்கம்

sushnma not responce

தமிழர்கள் என்ன மனிதர்கள் இல்லையா?... சுஷ்மா சுவராஜ் மீது கடுப்பில் மீனவர்கள்…

இலங்கை கடற்பயினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இதுவரை இந்திய வெளியுறதுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எந்த கருத்தும் தெரிவிக்காததால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடுப்பில் உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட்டரில் பதிவு செய்த சுஷ்மா சுவராஜ்,  தமிழக மீனவர், அதுவும்  இந்தியாவில் வேற்று நாட்டவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவிலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தமிழக மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்கள்,   வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இங்கு வரும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கலைஞர் அரசு போக்குவரத்து கழகமாகும் அரசு போக்குவரத்து கழகம்..? பகீர் கிளப்பும் எச்.ராஜா