
காவிரியில் 2000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி வழக்கு விசாரணை ஜூலை 11 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நதிநீர் நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றதில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து, இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்னாடக அரசுகள் மனுதாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் அனைத்தையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவிரியில் 2000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளனர். மேலும் காவிரி வழக்கு விசாரணையை ஜூலை 11 தேதிக்கு ஒத்திவைத்தனர்.