சொத்து குவிப்பு வழக்கை விரைவு படுத்த வேண்டும்…சசிகலாவுக்கு எதிராக சட்டப் பஞ்சாயத்து அதிரடி…

First Published Dec 26, 2016, 7:44 AM IST
Highlights


சொத்து குவிப்பு வழக்கை விரைவு படுத்த வேண்டும்…சசிகலாவுக்கு எதிராக சட்டப் பஞ்சாயத்து அதிரடி…

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நீதிபதி குன்ஹா வழங்கிய தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ரத்து செய்து 4 பேரையும் விடுதலை செய்தார். இதனை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா காய்நகர்த்தி வருகிறார்.
துணைக்கு தன் குடும்ப உறவினர்கள் அனைவரையும் பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, பின்னர் தமிழக முதலமைச்சராகவும் ஆகிவிட வேண்டும் என நினைக்கிறார். தற்போது ஆட்சியிலும்,கட்சியிலும் பதவியில் இருக்கும் சிலர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா முதலமைச்சரான பின்பு, சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் பதவி   
விலக வேண்டிவரும். இப்படி ஒரு அசாதாரண சூழ்சிலையை தவிர்ப்பதற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் மோடி அரசின் தலையீட்டால்தான் இந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வழக்கு சரிசெய்யப்பட்டுள்ளது என்றும் வதந்திகள் பரவி வருவதால் உடனடியாக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.

 

click me!