ஸ்டெர்லைட்டுக்கு பெருகும் ஆதரவு...! ராம்தேவ்-ஐ தொடர்ந்து ஜக்கி வாசுதேவ்...

First Published Jun 28, 2018, 2:56 PM IST
Highlights
Support for Sterlite - Jockey Vasudev support


வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்து யோகா குரு பாபாராம்தேவ் கூறிய கருத்தை தொடர்ந்து, சத்குரு ஜக்கி வாசுதேவும், ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மிகப் பெரிய தொழிலகளை அழித்துக் கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாளின்போது, பயங்கர கலவரம் ஏற்பட்டது. பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 

பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்ற தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆலைக்கு சீல் வைத்தார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக நோட்டீசும், ஆலையின் கதவில் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில், யோகா கலை பயிற்சி அளிக்க யோகா குரு பாபா ராம் தேவ் லண்டன் சென்றபோது, ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில்
அகர்வாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு, பாபா ராம்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலைச் சந்தித்தேன். தேச கட்டுமானத்தில் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதன் மூலமும், பொருளாதார செழிப்பை வைத்திருப்பதன் மூலமும், தேச கட்டுமானத்தில் பங்காற்றும் அவருக்கு மரியாதை செய்கிறேன். உலகளவில் உள்ள சதிகாரர்கள், தென்னிந்தியாவில் உள்ள வேதாந்தா ஆலைக்கு எதிராக அப்பாவி மக்கள் மூலம் கிளச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தேசத்தின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள்தான் கோயில், தொழிற்சாலைகள் மூடியிருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

ந்தனர். இந்த நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜக்கி வாசுதேவ், அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஒரு தொழிற்சாலை இப்போது மூடப்பட்டு விட்டது. இது சரியானது அல்ல... இனிமேல, அப்பகுதியில் சுற்றுச்சூழல மாசு ஏற்படாதவாறு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து, அந்த விதிகளுக்கு அந்த தொழிற்சாலையை உட்படுத்த வேண்டும். அதற்கான வழிகள் இருக்கிறது என்றுதான் நான் கூறுவேன். இதுபோன்ற தொழில்களை நீங்கள் மூடிவிட்டால், இந்த நாட்டை எங்கே நீங்கள் அழைத்துச் செல்கிறீர்கள் என்று கூறியிருந்தார்.

ஜக்கி வாசுதேவின் இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்கருத்துக்கள் வந்த நிலையில், நான் தாமிரம் உருக்கும் தொழிலில் வல்லுநர் இல்லை. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் தெரியும். நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், நாம் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும். சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப்பெரிய தொழில்களை அழித்துக் கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஸ்டெர்லைட் ஆலையால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்தே, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின்போது 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். ஜக்கி வாசுதேவ் இதனைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார கண்டோட்டத்தில் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், யானைகள் நடமாடும் வனப்பகுதியில், ஈஷா அறக்கட்டளை பல்வேறு கட்டடங்களைக் கட்டி வருவது பற்றி விலங்குகள் நல வாரியத்தினர் புகார் கூறி வந்தாலும், அது போன்று எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடபடவில்லை என்று ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து கூறி வருவதையும் நெட்டிசன்கள் சுட்டி காட்டி வருகின்றனர்.

click me!