முறை தவறிய காதலால் ஏற்பட்ட சோகம்…. அண்ணன் – தங்கை ரயில் முன் பாய்ந்து தற்கொலை !!

 
Published : Jun 28, 2018, 02:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
முறை தவறிய காதலால் ஏற்பட்ட சோகம்…. அண்ணன் – தங்கை ரயில் முன் பாய்ந்து தற்கொலை !!

சுருக்கம்

Love with brother and sister in tricht they sucide

திருச்சியில் முறையற்ற அண்ணன் – தங்கை காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த ராஜாராம் என்ற மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் ராஜாராமின் தங்கை லாவண்யா 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  ராஜாராமுக்கு லாவண்யா தூரத்து சொந்தத்தில் தங்கை முறை வேண்டும்.

அவர்கள் இருவரும் சிறு வயதில் முதல் சேர்ந்தே பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் ராஜாராம் – லாவண்யா இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு  உயிராக காதலிக்கத் தொடங்கினர். இதை அறிந்த இருவரின் பெற்றோரும் அவர்களை அழைத்து நீங்கள் இருவரும் அண்ணன் – தங்கை உறவு முறை உள்ளவர்கள்.

ஆதலால் நீங்கள் காதலிப்பது பெரும் தவறு என அறிவுரை கூறியதோடு, காதலிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பெற்றோரின் அறிவுரையை கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. தொடர்ந்து அவர்கள் காதலித்து  வந்தனர்.

இதனால்  கோபமடைந்த அவர்களின் பெற்றோர் இருவரையும் அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து சிறிது நாள் அவர்கள் பேசாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவர்கள் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லாமல் பஸ் ஏறி அல்லூர் என்ற பகுதிக்குச் சென்றனர்.

அங்கிருந்து சிறிது தூரம் நடந்து  சென்ற அவர்கள் கடியாகுறிச்சி அருகே உள்ள ரயில்வே தண்டவாள பாதை அருகே உள்ள சிமெண்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்து நீண்ட நேரம பேசிக் கொண்டிருந்தனர்.

உயிருக்கு உயிரா காதலிக்கும் நமக்கு அண்ணன் தங்கை என்ற உறவு முறையை காட்டி பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே இனி நாம் வாழ்வில் இணைய முடியாது, சாவிலாவது இணைவோம் என முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்கள் பெற்றோருக்கு  உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினர். அதில் நாங்கள் இருவரும் காதலுக்கு அடிமையாகிவிட்டோம், எங்களால் பிரிந்து இருக்க முடியாது. அண்ணன் – தங்கை உறவு முறையால் எங்களால் சேர்ந்து வாழவும் முடியாது. எனவே நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்..எங்கள் முகத்தைக் கூட நீங்கள் யாரும் பார்க்க வேண்டாம் என எழுதி வைத்துவிட்டு அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கடிதத்தை கைப்பற்றினர். தொடர்ந்து  உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்
அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. பெருமிதமாக மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்