மன்னித்துவிடுங்கள் ரஞ்சித்; காலா தமிழகத்தில் ஓடாது; ரசிகர்களின் முடிவால் படக்குழு அதிர்ச்சி.

 
Published : Jun 01, 2018, 08:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
மன்னித்துவிடுங்கள் ரஞ்சித்; காலா தமிழகத்தில் ஓடாது; ரசிகர்களின் முடிவால் படக்குழு அதிர்ச்சி.

சுருக்கம்

super stars movie will not be released in Tamil Nadu says Tamil cinema fans

ரஜினி-ன் காலா திரைப்படம் வரும் ஜீன் 7 அன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்திற்கு, இப்போது நாலா பக்கமும் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ரஜினி தூத்துக்குடி பிரச்சனையின் தீவிரம் உணராமல், பொறுப்பற்று குறியிருக்கும் கருத்துக்கள், அவர் மீது மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதே, இதற்கெல்லாம் காரணம். ஏற்கனவே காலா திரைப்படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இதே போல நார்வே மற்றும் ஸ்விஸிலும் காலாவை திரையிட மாட்டோம். என தெரிவித்து இருக்கின்றனர் அங்கு வாழும் தமிழர்கள். தமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்டங்களை, வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார் ரஜினி இதுவே நாங்கள் காலாவை எதிர்க்க காரணம் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இப்போது காலாவிற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. காலா திரைப்படத்தை தமிழிலும் ரிலீஸ் செய்ய விடமாட்டோம். அப்படியே ரிலீசானாலும் பார்க்க மாட்டோம். என சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். மேலும் ரஞ்சித்திடம் எங்களுக்கு ரஜினி மீது தான் கோபம் உங்கள் மீது அல்ல. எனவே மன்னித்துவிடுங்கள் ரஞ்சித் என்றும் பதிவிட்டு வருகின்றனர் ரஞ்சித்தின் ரசிகர்கள்.

ரஜினிகாந்தின் படத்திற்கு இந்த அளவிற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது, திரைத்துறை வரலாற்றிலேயே இது தான் முதல்முறை. இத்தனைக்கும் காரணம் அவரது அரசியல் வரவும், சமுதாய பொறுப்பற்ற பதில்களும், பிற்போக்கான கருத்துக்களுமே. இவர் நடிகராக மட்டுமே இருந்திருக்கலாம் என இப்போது வருந்துகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!