Sunday lockdown in Tamilnadu : ரிப்பீட்டு... நாளை மறுநாளும் முழூஊரடங்கு... அரசு அதிரடி!!

Published : Jan 21, 2022, 04:09 PM ISTUpdated : Jan 21, 2022, 04:26 PM IST
Sunday lockdown in Tamilnadu : ரிப்பீட்டு... நாளை மறுநாளும் முழூஊரடங்கு... அரசு அதிரடி!!

சுருக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Sunday lockdown in Tamilnadu : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள்  ஆட்டோக்கள், வாடகை கார்களில் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும், ஏற்கெனவே முழு ஊரடங்கு நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்திற்கும் அனுமதி உண்டு எனவும் அரசு கூறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் 23 ஆம் தேதியும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும் எனவும், அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில், கொரோளா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 16-1-202 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொது மக்கள் நலன் கருதிதொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  நடைமுறைப் படுத்தப்பட்ட அதே அந்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயப்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!