ஆபாச படம் வெளியிட்ட சுசித்ரா மீது புகார் – இளைஞர்கள் கெட்டு விடுவார்கள் என ஆவேசம்...

 
Published : Mar 05, 2017, 07:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
ஆபாச படம் வெளியிட்ட சுசித்ரா மீது புகார் – இளைஞர்கள் கெட்டு விடுவார்கள் என ஆவேசம்...

சுருக்கம்

Suchitras reporting on porn movie - as the obsession with youth will be spoiled

நடிகை சுசித்ரா கார்த்திக், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இது இளைஞர்களின் வக்கிரத்தை தூண்டும் செயல் என இந்திய லீக் கட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது.

சினிமா பின்னணி பாடகியும் வானொலி தொகுப்பாளருமான சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகர் நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக நடிகர் தனுஷ் ஆட்களால் தான் தாக்கப்பட்டதாகவும், பிரபல நடிகர் நடிகைகளின் லீலைகள் வெளியிடப்படும் எனவும் சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இது நெட்டிசன்களிடையேயும், திரையுலகினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, திவ்ய தர்ஷினி, ஆகியோரின் புகைப்படங்கள் வெளிவந்தன.

பின்னர், அனுயா, சஞ்சிதா ஆகியோரின் ஆபாச வீடியோ காட்சிகளும் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகின.

இன்னும் பிரபலங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்படும் எனவும் அந்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே சுசித்ரா தனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை நான் வெளியிடவில்லை எனவும், தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சுசித்ரா கார்த்திக், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவதாகவும், எனவே அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ரசூல்மைதீன், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:     

நடிகை சுசித்ரா கார்த்திக், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

நடிகர், நடிகைக்குள் இருக்கும் சண்டையை சமூக வலைத்தளம் மூலம், இளைஞர்களை வக்கிர எண்ணத்தை தூண்டும் வகையில் புகைப்படம், வீடியோகளை பதிவு செய்வது கண்டிக்க தக்க செயலாகும்.

நடிகர், நடிகைகளை சமூக வலைதளங்களில் பின்பற்றக்கூடிய ரசிகர்கள், இளைஞர்கள் இருப்பார்கள்.

நடிகர்,நடிகைகளின் சேட்டைத்தனத்தால், இளைஞர்கள் வழிதவற வாய்ப்பாக அமைந்துவிடும்.

ஆகவே காவல் துறை ஆணையர்  அவர்கள், நடிகை சுசித்ரா கார்த்திக் மீது சட்டநீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மெழுகுவர்த்தி, டார்ச் லைட் தயாரா வச்சுக்கோங்க.. தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி வரை மின்தடை.!
விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு