“இல்லாத ஆவணங்களை வைத்து வருமான வரித்துறையினர் மிரட்டினார்கள்" - சுப்பிரமணி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பு

 
Published : May 11, 2017, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
“இல்லாத ஆவணங்களை வைத்து வருமான வரித்துறையினர் மிரட்டினார்கள்" - சுப்பிரமணி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பு

சுருக்கம்

subrmani letter before suicide revealed

அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் கான்ட்ராக்டர் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

கடந்த 7-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இதையொட்டி அவரது நெருங்கிய நண்பர்  நாமக்கல் சுப்பிரமணியம் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும், அவரது வங்கி கணக்குள் முடக்கப்பட்டு அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில, நேற்று முன்தினம் சுப்பிரமணியனை விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். இந்த விசாரணையில் கைது செய்யப்படுவோம் என பயந்த சுப்பிரமணியம் தற்கொலை செய்தது தெரியவந்தது. 

மேலும், தற்கொலை செய்வதற்கு முந்தைய நாளான 7-ந் தேதி பண்ணை வீட்டில் உள்ள மரத்தடியில் பல மணி நேரம் அமர்ந்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை கண்டெடுத்த அவரது உறுவினர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

4 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் ந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடிதம் 13 அதிகாரிகளுக்கு, சுப்பிரமணியம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சுப்பிரமணியம், கான்ட்ராக்டர் தொழிலில் எப்படி முன்னேறி வந்தார். எத்தனை இடையூறுகள் ஏற்பட்டது. இதில், யார் யார் தடங்கல்களை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை பெற்ற போலீசார், சுப்பிரமணியம் எழுதிய கடிதம் தானா, அதில் இருப்பது அவரது கையெழுத்து தானா என விரிவான விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

மேலும், பி.எஸ்.கே.தென்னரசு என்பவர் தனது தொழிலில் போட்டி ஏற்படுத்தினார் என்பதை குறிப்பிட்டுள்ளார். அதில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, தனது வீட்டிலும் தங்க கட்டிகள், பணம் வைத்திருப்பதாகவும் புகார் கூறினார். அதன்பேரில் எனது வீட்டில் சோதனை நடந்தது.

அப்போது, கிடைக்காத அவணங்களை கைப்பற்றியதாகவும், அதன் மீது விசாரணை நடத்துவதாகவும் வருமான வரித்துறையினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி