சு.சாமியின் டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் - கமிஷ்னரிடம் புகார் மனு

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 07:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
சு.சாமியின் டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் - கமிஷ்னரிடம் புகார் மனு

சுருக்கம்

சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் பக்கத்தை முடக்கக்கோரி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா புகார் அளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்து தமிழர்களை தகாத முறையில் திட்டி வருகிறார். ஜல்லிக்கட்டுப் போட்டியின் போதும் தமிழர்களை பொறுக்கி என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சுப்ரமணிய சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழர்களை பொறுக்கி என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருப்பதாவது :

பாகிஸ்தான், ராஜஸ்தான் எல்லை பகுதி வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பின் ஏஜெண்ட் 6 பேர் கொண்ட குழு சென்னைக்குள் நுழைந்துள்ளனர். தமிழக பொறுக்கிகள் தான் அவர்களது இலக்கு என கூறியுள்ளார்.

இந்நிலையில் சுப்ரமணிய சுவாமியின் டிவிட்டர் பக்கத்தை முடக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் சுப்ரமணிய சுவாமியின் சர்ச்சைக்குரிய கருத்துகள் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்டுத்தி வருவதாகவும், மத வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!