திருச்சியில் பயங்கர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

 
Published : Feb 23, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
திருச்சியில் பயங்கர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

திருச்சி சமயபுரம் அருகே லாரி மீது வேன் மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 27 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு வேனில் மீண்டும் கடலூர் திரும்பி கொண்டிருந்தனர்.

அதிகாலையில் வேன் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியை கடந்தபோது, மணப்பாறையிலிந்து பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த 15 வயது சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், முன்னால் சென்ற லாரியை வேன் ஓட்டுநர் முந்தி செல்ல முயற்சித்ததாலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!