உளவுத்துறை உயரதிகாரி மாற்றம் - தமிழக அரசு அதிரடி

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
உளவுத்துறை உயரதிகாரி மாற்றம் - தமிழக அரசு அதிரடி

சுருக்கம்

தமிழக அரசின் உளவுத்துறை ஐஜி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் உளவுத்துறை ஐஜியாக 2014ஆம் ஆண்டு டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

நேர்மையான அதிகாரியான அவர் 2015ஆம் ஆண்டு இறுதியில் திடீரென தூக்கியடிக்கபட்டார்.

பின்னர் சசிகலா குடும்பத்துக்கு ஆதரவான சத்யமூர்த்தி உளவுப்பிரிவு தலைவராக நியமிக்கப்ட்டார்.

2016 சட்டமன்ற தேர்தலில் சத்யமூர்த்தி மாற்றப்பட்டு கரண் சிம்ஹா உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்ட்டார்.

தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் சத்தியமூர்த்தியை ஜெயலலிதா நியமித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா திடீர் மரணம் அடைந்ததையொட்டி ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றார்.

ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து உளவுத்துறை அதிகாரி சத்யமூர்த்தி விடுப்பில் செல்வதாக கூறி சசிகலா தரப்புக்கு ஆதரவாக தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்று ஓபிஎஸ் தரப்பால் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் உளவுத்துறை ஐசியாக நியமிக்கப்ட்டார்.

இதற்கிடையே ஆட்சியை பிடிக்க நடந்த போட்டியில் சசிகலா தரப்பின் சார்பில் எடப்பாடி முதலவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து தனக்கு வேண்டிய ஐபிஎஸ் அதிகாரிகளை எடப்பாடி மாற்றுவார் என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் உளவுத்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதமும் மாற்றப்படுவார் என்று தெரிவித்திருந்தோம்.

அதே போல் டேவிட்சன் தேவாசீர்வாதம் தூக்கியடிக்கபட்டிருக்கிறார்.

தற்போது உளவுத்துறை ஐஜி பொறுப்புக்கு மீண்டும் சத்யமூர்த்தி அல்லது சென்னை நுண்ணறிவு பிரிவு கூடுதல் ஆணையர் தாமரை கண்ணன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி