தமிழகத்தில் பொறியியல் படித்ததற்கு மாணவர்கள் பெருமை கொள்ளனும்! ஏன் என்று விளக்குகிறார் துணைவேந்தர் எஸ்.சுப்பையா

 
Published : Jun 19, 2017, 07:41 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
தமிழகத்தில் பொறியியல் படித்ததற்கு மாணவர்கள் பெருமை கொள்ளனும்! ஏன் என்று விளக்குகிறார் துணைவேந்தர் எஸ்.சுப்பையா

சுருக்கம்

Students should be proud to study engineering in Tamil Nadu Vice Chancellor s.suppaiya

புதுக்கோட்டை

உலகில் இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பொறியாளர்கள்தான் மதிக்கப்படுகின்றனர். எனவே, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பொறியியல் படித்ததற்கு மாணவர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்” என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.சுப்பையா.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லெணா விலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏழாம் ஆண்டு பட்டயமளிப்பு விழா நேற்று நடைப்பெற்றது.

இதில், கல்வி நிறுவனங்களின் தலைவர் இரா.வைரவன் தலைமைத் தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றும் மாணவ, மாணவிகளுக்குப் பட்டயம் வழங்கினார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.சுப்பையா.

அப்போது அவர் பேசியது:

“இப்போது பெற்றுள்ள பட்டயத்துடன் கல்வி முடிந்துவிடவில்லை. இது தொடக்கம்தான். தொடர்ந்து, பட்டம் பெற முயற்சி செய்ய வேண்டும். பணியில் சேர்ந்தாலும் கல்வியைத் தொடர வேண்டும்.

ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்ப்பவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள். 

உயர் கல்வியில் தமிழகம் 43 சதவீதத்துடன் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. எனவே, தமிழகத்தில் உயர்கல்வி படிப்பது பெருமைக்குரியது.  

வாழ்வில் சாதிக்க பணம் மட்டும் உதவாது. வேலை கிடைத்துவிட்டது என அத்துடன் திருப்தி அடைந்துவிடக் கூடாது.

நம் நாட்டில் ஆண்டுதோறும் 6 இலட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர். ஆனால், அமெரிக்காவிலோ 99 ஆயிரம் பொறியாளர்கள்தான் உருவாகின்றனர். உலகில் இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பொறியாளர்கள்தான் மதிக்கப்படுகின்றனர். எனவே, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பொறியியல் படித்ததற்கு மாணவர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மின்னணு தொடர்பியல், மின்னியல், இயந்திரவியல், கட்டடவியல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 357 பேர் பட்டயம் பெற்றனர்.

கல்லூரி முதல்வர் எஸ்.ஜி. செல்வராஜ் அறிக்கை வாசித்தார். முதன்மைச் செயல் அலுவலர் எஸ்.கார்த்திக் வரவேற்றார். துணைத் தலைவர் சோம. நடராஜன் நன்றித் தெரிவித்ஹ்தார்.

இதில், நிர்வாக இயக்குநர் எம். செல்வராஜ், செயலர் டி. தியாகராஜன், செயல் இயக்குநர் ஆ.பாண்டிகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் எம். ராமையா, மனிதவள இயக்குநர் மீனா வைரவன், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!