பரபரப்பு!! கலவரமான போராட்டக்களம்.. காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு.. போலீஸ் மீது கல்வீச்சு..

Published : Jul 17, 2022, 11:40 AM ISTUpdated : Jul 17, 2022, 12:30 PM IST
பரபரப்பு!! கலவரமான போராட்டக்களம்.. காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு.. போலீஸ் மீது கல்வீச்சு..

சுருக்கம்

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் , காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் , அதனை கட்டுபடுத்த காவல்துறயினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் , காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் , அதனை கட்டுபடுத்த காவல்துறயினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.  தனியார் பள்ளியில் பிளஸ்2  படித்து வந்த மாணவி ஜூலை 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் , கடந்த 5 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..! மாணவ அமைப்பு போராட்டத்தில் வன்முறை.. போலீசார் துப்பாக்கி சூட்டால் பதற்றம்

மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இன்று மாணவியின் இறப்பு விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவியின் உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து போரட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.

உறவினர்கள் போராட்டத்தினால் சென்னை - சேலம் நெடுஞ்சாலை போர்களமாக காட்சியளிக்கிறது. உறவினர்கள், போராட்டக்காரர்கள் கல்வீசியதில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சின்னசேலம் அருகே போராட்டத்தை அடக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. போர்க்களமாக மாறிய சென்னை - சேலம் நெடுஞ்சாலை.. போலீஸ் துப்பாக்கிச்சூடு

இதனிடையே கலவரத்தில் காயமடைந்த காவல்துறயினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் , காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் , அதனை கட்டுபடுத்த காவல்துறயினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

  

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி