
திண்டுக்கல்லில் பொறியியல் கல்லூரி மாணவி, விடுதி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் பி.எஸ்.என். ஏ. பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், வண்டியூரை சேர்ந்தவர் மாணவி தாரணி. இவர், பி.எஸ்.என்.ஏ, கல்லூரியில் தகவல் தொழில்நுட்பவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தாரணி அருகில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இன்று காலையில் மாணவிகள் அனைவரும், கல்லூரி செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, மாணவி தாரணி அறையில் உள்ள மற்ற தொழிகளும் கல்லூரி செல்வதற்கு புறப்பட தயாராகி இருந்தனர். இந்த நிலையில் மாணவி தாரணி, விடுதி மாடிக்கு சென்று திடீரென கீழே குதித்தார்.
இதனால் பலத்த காயமடைந்த தாரணியை அருகில் இருந்த மாணவர்கள் மீட்டனர். பின்னர், தாரணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை கொண்டு சென்ற அவரை, டாக்டர்கள் பரிசோதித்தனர். ஆனால் மாணவி தாரணி, உயிரிழந்திருப்பாக அவர்கள் கூறினர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.