இரயிலில் அடிபட்டு மாணவன் பலி; தற்கொலையா? விபத்தா? – தொடர்கிறது விசாரணை…

 
Published : Dec 21, 2016, 09:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
இரயிலில் அடிபட்டு மாணவன் பலி; தற்கொலையா? விபத்தா? – தொடர்கிறது விசாரணை…

சுருக்கம்

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே விரைவு இரயிலில் அடிபட்டு பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் பலியானான். மாணவன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது விபத்தா? என்று காவலாளர்கள் விசாரணையை தொடர்கின்றனர்.

அரக்கோணம் அருகே புளியமங்கலம், ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மகன் ஜெகன் (17). அரக்கோணத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை புளியமங்கலம் இரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் தாதர் விரைவு இரயிலில் ஜெகன் அடிப்பட்டு இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அரக்கோணம் இரயில்வே காவல் இன்ஸ்பெக்டர் தீபா, சப்–இன்ஸ்பெக்டர் அண்ணாமலை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து ஜெகன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது இரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவன் இரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் புளியமங்கலம் கிராமத்து மக்களிடத்திலும், அரக்கோணம் ஆதிதிராவிடர் ஆண்கள் பள்ளியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!