கூட்டுறவு சங்கங்களில் குற்றச்செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை... ஐ.பெரியசாமி எச்சரிக்கை!!

Published : Apr 05, 2022, 04:11 PM IST
கூட்டுறவு சங்கங்களில் குற்றச்செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை... ஐ.பெரியசாமி எச்சரிக்கை!!

சுருக்கம்

கூட்டுறவு சங்ககளில் அரிசி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கூட்டுறவு சங்ககளில் அரிசி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் மண்டலத்தில், ராஜபாளையம் வட்டம் க்யூ.837 முகவூர் கூட்டுறவு வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரியும் கே.தங்கதுரை என்பவர் மீது பாலியல் தொந்தரவு மற்றும் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தது ஆகிய புகார்கள் எழுந்தது. இதை அடுத்து பாலியல் தொந்தரவு மற்றும் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தது போன்ற குற்றங்களுக்காக ராஜபாளையம் வட்டம் க்யூ.837 முகவூர் கூட்டுறவு வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரியும் கே.தங்கதுரை என்பவர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுப்போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கூட்டுறவு சங்ககளில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மண்டலத்தில், ராஜபாளையம் வட்டம் க்யூ.837 முகவூர் கூட்டுறவு வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரியும் கே.தங்கதுரை என்பவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தது ஆகிய புகார்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், 30.03.2022 அன்று நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அரிசிக்கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் அளிக்க விழைவோர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் தனி வாட்ஸ் அப் புகார் எண் (98840 00845) என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை. பணியாளர்களும், எந்தவிதமான நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் அச்சமின்றி அர்ப்பணிப்பு. உணர்வுடன் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!