108 ஆம்புலன்ஸ் மீது கல்வீசித் தாக்குதல் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : May 28, 2017, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
108 ஆம்புலன்ஸ் மீது கல்வீசித் தாக்குதல் -  காஞ்சிபுரத்தில் பரபரப்பு

சுருக்கம்

stone attack on 108 ambulance

காஞ்சிபுரம் மாவட்டம் கிளியனூரில் ஒருவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவசர சேவை எண்ணாண 108க்கு அழைப்பு வந்ததுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நோயாளியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொண்ட சேவைப் பிரிவு அதிகாரிகள், அந்நபரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 அவசர சிகிச்சை ஊர்தியை அனுப்பி வைத்தனர். 

சில மணி நிமிடங்களிலேயே நோயாளியின் வீட்டிற்குச் சென்ற ஆம்புலன்ஸ், அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தது. 

கிளியனூரைத் தாண்டி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கையில், சாலையோரம் மறைந்திருந்த மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தின் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இருப்பினும் நோயாளியை மருத்துவமனையில் சேர்த்த பின்னர்,  தாக்குதல் குறித்து ஓட்டுநர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த வாலாஜாபாத் காவல்துறையினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். 

உயிருக்குப் போராடிய ஒருவரை காப்பாற்றச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது 108 அவசர சேவை மைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!