குற்றவாளிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்... பல்வீர் சிங்-க்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்!!

By Narendran S  |  First Published Mar 31, 2023, 7:51 PM IST

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் இன்று நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தைத் தெரிவிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: கழிவு நீரோடையில் வாந்தி எடுத்த கர்ப்பிணி தவறி விழுந்து பலி

Tap to resize

Latest Videos

அதன்படி மனித உரிமைகள் ஆணையத்தில் மாரியப்பன், செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகி தங்களிடம் ஏ.எஸ்.பி கடுமையாக நடந்துகொண்ட விவகாரம் குறித்து சாட்சியம் அளித்தனர். ஆணையத்தின் எஸ்.பி-யான மகேஷ்வரன் தலைமையிலான குழுவினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஏ.எஸ்.பி பல்வீர் சிங் தங்களைத் தாக்கியது குறித்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரூரில் திருமணமான 3 நாட்களில் தாய் வீட்டிற்கு சென்ற பெண் எடுத்த விபரீத முடிவால் சோகம்

அத்துடன், ஏ.எஸ்.பி-மீது புகாரளிக்காமல் இருக்குமாறு போலீஸார் மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் ஆணையத்தில் முறையிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் ஏப்ரல் 3 ஆம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வீர் சிங்கிற்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இதனிடையே விசாரணைக்கு வந்தவர்களின் பல் உடைக்கப்பட்ட புகாரில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!