கரூரில் திருமணமான 3 நாட்களில் தாய் வீட்டிற்கு சென்ற பெண் எடுத்த விபரீத முடிவால் சோகம்

Published : Mar 31, 2023, 06:50 PM IST
கரூரில் திருமணமான 3 நாட்களில் தாய் வீட்டிற்கு சென்ற பெண் எடுத்த விபரீத முடிவால் சோகம்

சுருக்கம்

கரூர் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் அம்மா வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 

திருமணம் முடிந்த கையோடு நேற்று புதுமணப்பெண் ரம்யா தனது கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். உறவினர்கள் வெளியே இருந்த நேரத்தில் வீட்டில் தனி அறையில் ரம்யா தூக்கு போட்டுள்ளார். நீண்ட நேரம் அவர் வெளியே வராததை அறிந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரம்யா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வாந்தி எடுத்த போது சாக்கடையில் தவறி விழுந்த கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ரம்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து மூன்று நாட்களில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

9ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு; கொலையில் முடிந்த பரிதாபம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக தலைவருக்கு சரியான ஆலோசனை இல்லை – 2ஆம் கட்ட தலைவர்களை குற்றம் சாட்டிய தாடி பாலாஜி!
கதறி அழுத அன்பில் மகேஷ்..!கண்ணீர் விட்ட செந்தில் பாலாஜி.. உலுக்கும் வீடியோ