விண்ணை முட்டும் முழக்கங்களோடு தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

 
Published : May 18, 2017, 09:23 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
விண்ணை முட்டும் முழக்கங்களோடு தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

சுருக்கம்

Start Cooperative Bank Staff demonstrated with the blazing slogans ...

ஈரோடு

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய நடக்கும் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டியில் உள்ளது மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம். இங்கு, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கௌரவ பொதுச் செயலாளர் சி.குப்புசாமி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பி.காமராஜ் பாண்டியன், முன்னாள் தலைவர் பி.செல்லமுத்து ஆகியோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் “தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் ரே‌சன் கடை பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் 100 சதவீத ஆய்வு நடவடிக்கை மற்றும் மிரட்டல்களை கைவிட வேண்டும் என்றும்,

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய நடக்கும் முயற்சிகளுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மேசப்பன், பொருளாளர் கே.எம்.சேதுபதி, மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.பழனிச்சாமி, என்.முருகேசன், இணை செயலாளர்கள் பி.சண்முகம், கே.கதிர்வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!