அப்படியா ...!  “சசிகலா  பதவி  ஏத்துட்டாங்களா ...? எனக்கு தெரியாதே “ - ஸ்டாலின்  ஆச்சர்யம் ..!!!

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
அப்படியா ...!  “சசிகலா  பதவி  ஏத்துட்டாங்களா ...? எனக்கு தெரியாதே “ - ஸ்டாலின்  ஆச்சர்யம் ..!!!

சுருக்கம்

அப்படியா ...!  “சசிகலா  பதவி  ஏத்துட்டாங்களா ...? எனக்கு தெரியாதே “ - ஸ்டாலின்  ஆச்சர்யம் ..!!!

அதிமுக  பொதுச் செயலாளராக  சசிகலா   பதவியேற்றது  குறித்த  கேள்விக்கு ,  மிகுந்த  ஆச்சர்யத்தை  தனது  பதிலாக  தெரிவித்தார்  திமுக  பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

ஜெயலலிதா  மறைவிற்கு பிறகு, காலியாக இருந்த  அதிமுக  பொதுச்செயலாளர் பதவிக்கு அதிமுகவின்  சின்னம்மா  சசிகலா நியமனம்  செய்யப்பட்டார்.அதனை   தொடர்ந்து,  இன்று அதிமுக  மூத்த நிர்வாகிகள்  முன்னிலையில்  பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், கட்சி  நிர்வாகிகளிடமும்  உரையாற்றினார் ..இந்நிலையில்  சென்னை கொளத்தூர்  சட்டமன்ற  தொகுதியில்,  வளர்ச்சி திட்டங்களை  பார்வையிட்டு , துவங்கி  வைத்த அத்தொகுதியின் சட்டமன்ற  உறுப்பினர் முக ஸ்டாலின்  செய்தியாளர்களை   சந்தித்தார்.

ஜெயலலிதாவின்  மரணம் குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி  வைக்க , முதல்வர் ஒ. பன்னீர்  செல்வம்,  தேவையான  விளக்கங்களை  கட்டாயம் அளிக்க  வேண்டும் என்றார்.

 பின்னர், அதிமுக  புதிய  பொதுச்செயலாளராக  சசிகலா  பதவி  ஏற்றது குறித்த  கேள்விக்கு பதிலளித்த  ஸ்டாலின்,  “ அப்படியா ..! எனக்கு தெரியாதே “ -  என  ஒரே   போடாய்  போட்டார் .

இதிலிருந்து, இப்போதைக்கு  சின்னம்மா  சசிகலா  பற்றியும் , அதிமுகவின்   உள்விவகாரங்கள்  குறித்தும், திமுக  தலையிட போவதில்லை  என்பது உறுதியாகி உள்ளது .

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு.. காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. சூப்பர் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!