தமிழை ஏன்யா கொல்லுறீங்க?: மா.செ.க்களை வாட்ஸ் ஆப்பில் வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!

First Published Jun 29, 2017, 1:03 PM IST
Highlights
stalin speak about thr wrong tamil spelling mistake


நமக்கு நாமே நடைபயணத்தின் போது ஹைடெக் அரசியல் அணுகுமுறைகளுக்கு மாறிய ஸ்டாலின்...அந்த ஸ்டைலை தொடர்ந்து அப்படியே பிக் அப் செய்து கொண்டு போகிறார் . 

தி.மு.க.வின் அத்தனை மாவட்ட செயலாளர்களையும் இணைத்து ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை நடத்துகிறார் ஸ்டாலின். இதில் அந்தந்த மாவட்டங்களில் தாங்கள் செய்யும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விபரங்களை மாவட்ட செயலாளர்கள் போட்டோ மற்றும் செய்தியாக பதிவிட வேண்டும். தவறாமல் அதை பார்க்கும் ஸ்டாலின் சில நேரங்களில் கமெண்ட் செய்வதும் உண்டு. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அனுப்பும் சுற்றறிக்கைகள் கூட சில நேரங்களில் இப்படி குரூப்பில் வரும். 

கடந்த 3_ம் தேதியில் துவங்கி கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. பொதுக்கூட்டங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று போய்க் கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்வுகளையும் மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் அட்மின்னாக இருக்கும் குரூப்பில் உடனுக்குடன் பகிர்கிறார்கள். சிறப்பான கூட்டங்களுக்கு ஸ்டாலினிடம் இருந்து குரூப்பிலேயே வாழ்த்துக்களும் வந்து விழுகின்றன. 

யார் தளபதியிடம் அதிக வாழ்த்துக்களை பெறுவது என்று மாவட்ட செயலாளர்களுக்குள்ளே கிட்டத்தட்ட போட்டியே உருவாகிவிட்டது. இது கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுப்பதால் ஸ்டாலினும் இதை முழுமையாக உற்சாகப்படுத்துகிறார். 

இந்நிலையில், சமீபத்தில் தென் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளர், மாலையில் தான் நடத்த இருக்கும் பொதுக்கூட்டத்துக்கு பிரம்மாண்ட மேடை தயாராவதை ஸ்டாலினின் குரூப்பில் ரொம்ப பெருமையாக போட்டிருக்கிறார். நிகழ்ச்சி நடக்கும் முன் செமத்தியாக ஒரு டிரெய்லரை போட்டுவிட்டோம் எனும் மகிழ்ச்சியில், அந்த விழாவை பற்றி சில வரிகளில் செய்தியும் போட்டு....”விலா சிரக்க வாழ்த்துங்கள் தளபதி.” என்று தமிழில் டைப் செய்து அனுப்பியிருக்கிறார். 

அவர் அனுப்பிய செய்தியில் தமிழ் வார்த்தைகள் ஏகப்பட்ட பிழையோடு டைப் செய்யப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறார் ஸ்டாலின். அதிலும் இறுதியில் ’விழா’வை_ விலா என்றும், ’சிறக்க’ என்பதற்கு பதிலாக ‘சிரக்க’ என்று டைப் செய்திருந்ததை பார்த்து ஸ்டாலினுக்கு செம காட்டமாம். 

உடனே குரூப்பிலேயே வெளிப்படையாக ‘ஏன்யா தமிழை கொல்லுறீங்க? முத்தமிழறிஞரோட கட்சியை சேர்ந்தவங்கன்னு வெளியில பெருமையா சொல்ல முடியுமா? அந்த மேடையில உள்ள பேனரை கவனிங்க...தளபதியை ‘தலபதி’ன்னு அடிச்சிருக்கீங்க.

இந்த மாதிரி தமிழை நம்ம கட்சிக்காரங்க கொல்லுறது இங்கே மட்டுமில்லை. பல மாவட்டங்கள்ள இப்படித்தான் நடக்குது. பிளக்ஸ் பேனர்கள்ள பெருசு பெருசா படம் வெச்சுக்குறீங்களே, அதுல கொட்டை கொட்டை எழுத்துக்கள்ள எவ்வளவு தப்பு இருக்குதுங்கிறதை யாராவது கவனிக்குறீங்களா?

முதல்ல தமிழை பிழையில்லாமல் பதிவு செய்ய பழகுங்க.” என்று வறுத்தெடுத்துவிட்டாராம். கூடவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் தி.மு.க.வினரால் பிழையோடு அச்சிடப்பட்ட பேனர்களில் அர்த்தம் அபத்தமாக மாறியிருப்பதை சுட்டிக்காட்டும் போட்டோக்கள் சில அவரது தரப்பிலிருந்து டேக் செய்யப்பட்டதாம். 

இதன் பிறகு சில மணி நேரங்களுக்கு குரூப்பில் எந்த மாவட்ட செயலாளரும் எதையும் ஷேர் செய்யாமல் அமைதி காத்தார்களாம். பிறகு கொங்கு மண்டலத்தை சேர்ந்த சீனியர் மாவட்ட செயலாளர் ஒருவர் ‘இனி தமிழ் சிதைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம் தளபதி. மன்னிக்கவும்.’ என்று போட, பின்னே பல மா.செ.க்கள் ‘ஆமாம் தளபதி, நிச்சயமாக தளபதி” என்றெல்லாம் அதை வழிமொழிந்தார்களாம். 

ஆனால் அதிலும் இரண்டு மா.செக்கள் எழுத்துப்பிழையோடு தமிழில் டைப் செய்து அனுப்பியிருக்கின்றனர். இதைப் பார்த்து ஸ்டாலின் சொன்ன வார்த்தை என்னவாக இருக்க முடியும்?!...

’ம்ம்ம்ம்ம் முடியல!’ என்பதுதானே!

click me!