
ஆட்டோவுக்கு தீ வைத்தது போலீஸ்தான்…வீடியோ ஆதாரங்களுடன் கவர்னரிடம் ஸ்டாலின் புகார்…
ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த போராட்டத்தை இன்று காலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கலைத்தனர்.
தமிழகம் முழுவதும ஆயிரக்கணக்கானனோர் கைது செய்யப்பட்டனர். சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் இன்று தடியடி நடத்தினர்.சென்னை முழுவதுமே இன்று அனைத்து இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று நடைபெற்ற வன்முறை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல என்றும், போலீசாரே ஆட்டோவுக்கு தீ வைத்தனர் என்று தெரிவித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கவர்னரிடம் ஒப்படைத்தாக கூறினார்.
சென்னையில் இன்று காலை முதல் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை தேவை என ஆளுநரிடம் ,பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வன்முறை விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்தார் என மு.க.ஸ்டாலினி தெரிவித்தார்.