
தலைமை செயலாளரை ஓபிஎஸ் உடனடியாக நீக்க வேண்டும்…மு.க..ஸ்டாலின் அதிரடி
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் தற்போது வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவரின் தலைமைச் செயலக அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பணியில் இருக்கும் ஒரு தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடப்பது இந்திய வரலாற்றிலேயே இது முதன் முறை என்பதால் நாம முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ஒருவர் வீட்டில் ரெய்டு நடப்பது மாநிலத்திற்கே அசிங்கமானது என்றார்.
ராம மோகன ராவை உடனடியாக நீக்க ஓபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்றும் ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.