ராணுவ காட்டுப்பாட்டில் வீட்டில் ரெய்டு - கூலாக தலைமை செயலகத்தில் ஃபைல் பார்க்கும் ராம்மோகன் ராவ்

 
Published : Dec 21, 2016, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
ராணுவ காட்டுப்பாட்டில் வீட்டில் ரெய்டு - கூலாக தலைமை செயலகத்தில் ஃபைல் பார்க்கும் ராம்மோகன் ராவ்

சுருக்கம்

சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் ஏராளமான செய்தியாளர்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மதியம் சுமார் 12 மணியளவில், ராமமோகன் ராவ் வீட்டுக்கு துணை ராணுவ படையினர் வந்தனர். ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினருடன், தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை முதல் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டின் முன்பு, குவிக்கப்பட்டுள்ள போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள், பொதுமக்களை காண்பித்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் என பலரிடமும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், இதுபோன்ற எந்த சம்பவமும் நடக்காதது போலவும், இதுபற்றி தன்க்கு எதுவுமே தெரியாதது போலவும் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ், ஃபைல்களை பார்த்து கொண்டு இருக்கிறார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் சம்பவம் நடக்கும்போது, எதுவும் தெரியாது போல் ராம்மோகன் ராவ் “கூலாக” ஃபைல்களை பார்த்து வேலை செய்து கொண்ருப்பது, தலைமை செயலக அதிகாரிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி