மாற்றப்படுகிறார் ராம் மோகன் ராவ்..!!

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
மாற்றப்படுகிறார் ராம் மோகன் ராவ்..!!

சுருக்கம்

தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத சோதனை தமிழகத்துக்கு பெரிய தலைக்குனிவு என்று ராம்மோகன்ராவ் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை துவக்கி வைத்துள்ளார். 

தமிழக அரசியலில் அதிகாரிகள் மட்டத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் வீட்டில் ரெய்டு என்பது ஜீரணிக்க முடியாத விஷயம் என்பது போக போக மிகப்பெரும் விமர்சனங்களாக எழும் என்பது நிச்சயம். 

ராம் மோகன் ராவ் ஐஏஸ் அதிகாரிகளில் ஆரம்பம் முதலே சர்ச்சைகளில் சிக்கியவர். தகுதியுள்ள 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கும் போது அதை மீறி குறுக்குவழியில் இவர் நியமனம் செய்யப்பட்டார். இதன் விளைவு தற்போது இந்த ரெய்டு என்கிறார் முக்கிய அரசியல் விமர்சகர் ஒருவர்.

 தகுதியான ஐஏஎஸ் அதிகாரிகளை மீறி ராம் மோகன் ராவ் வந்த கதை தமிழக அர்சியலில் பலருக்கும் தெரியும். மணல் காண்ட்ராக்ட் கும்பலுடன் தொடர்பு இருந்த கதையும் பலருக்கும் தெரியும். எப்போது சிக்குவார் என்று எதிர்பார்த்தோம் நேரம் வந்தது சிக்கினார் என்றார் அந்த விமர்சகர். 

ராம் மோகன் ராவுக்கு முன்பு இருந்த ஞானதேசிகன் நியமந்த்திலும் இதே பிரச்சனை எழுந்தது. டான் ஜெட்கோ விவகாரத்தில் சிக்கியதை அடுத்து அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டு இடையிலிருந்த ராம் மோகன் ராவ் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். 

தற்போது இவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியா முழுதும் தமிழகத்தின் மானம் கப்பலேறி கொண்டிருக்கும் சூழ்நிலையில் இனியும் ராம் மோகன் ராவை தலைமை செயலாளராக வைத்திருக்க முடியாது. ஆகவே உடனடியாக அவர் மாற்றப்படும் வாய்ப்புகளே அதிகம்.

 இது குறித்து தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்த போது அவர் வீட்டில் பணம் நகை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை வந்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே சாத்தியம், அதையும் மீறி விமர்சனங்கள் எதிர்கட்சிகளால் கடுமையாக வைக்கப்படும் சூழ்நிலையை தவிர்க்க அவரை மாற்றும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கின்ற்னர்.

PREV
click me!

Recommended Stories

ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார் ! கடுமையாக தாக்கி பேசிய நடிகர் கஞ்சா கருப்பு