ஜம்மு காஷ்மீர் அடுத்த ஸ்ரீநகர் மாவட்டம் ஹைதர்போரா பைபாஸ் பகுதியில் சிஆர்பிஎப் வாகனம் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சிஆர்பிஎப் வாகனம் மீது டிராக் பயங்கரமாக மோதியது. இதில், 13 சிஆர்பிஎப் காயமடைந்து ஹம்ஹாமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் மணி பரிதாபமாக உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் அடுத்த ஸ்ரீநகர் மாவட்டம் ஹைதர்போரா பைபாஸ் பகுதியில் சிஆர்பிஎப் வாகனம் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சிஆர்பிஎப் வாகனம் மீது டிராக் பயங்கரமாக மோதியது. இதில், 13 சிஆர்பிஎப் காயமடைந்து ஹம்ஹாமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், படுகாயமடைந்த தமிழகத்தை சேர்ந்த மணி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த எம்.என். மணி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்த்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த துணை ராணுவ வீரர் மணிக்கு பாரதி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மணி உயிரிழப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.